தி ராணா கனெக்‌ஷன்... ’வேட்டையன்’ பட வில்லனின் இன்னொரு அவதாரம்!

By S. மைதிலி

’பாகுபலி’ பட புகழ் வில்லன் நடிகர் ராணா டகுபதி ’தி ராணா கனெக்‌ஷன்’ என்ற டாக்‌ஷோவை அமேசான் ஓடிடி தளத்தில் தொகுத்து வழங்க இருக்கிறார்.

தெலுங்கில் ’பாகுபலி’ படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ராணா டகுபதி. தெலுங்கில் பல படங்களில் இவர் நடத்திருந்தாலும் பல்வால் தேவன் என்ற கதாப்பாத்திரம் இவரின் சினிமா வாழ்வை ஜொலிக்க வைத்தது. தற்போது ராணா, ’ஜெய்பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில், அமேசான் ஓடிடி தளத்தில் ராணா டகுபதி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்கான அறிவிப்பை அமேசான் ப்ரைம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதில், ’தி ராணா கனெக்‌ஷன்’ என்ற நிகழ்ச்சியை பிரபல நடிகர் ராணா டகுபதி அவரது இந்திய சினிமா நண்பர்களுடன் தொகுத்து வழங்கப் போவதாக தெரிவித்திருக்கும், அமேசான், ‘இது பரபரப்பான மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் டாக் ஷோ’ என்று குறிப்பிட்டுள்ளது. அமேசானின் இந்த அறிவிப்பின்படி, பிரபல இந்தி நிகழ்ச்சியான ’காபி வித் கரண்’ போல இந்த நிகழ்ச்சியும் இருக்கலாம் என்று ஓடிடி ரசிகர்கள் கணித்துச் சொல்லி வருகிறார்கள். இதைப் போலவே, தமிழில் ’காபி வித் டிடி’ நிகழ்ச்சி விஜய் டிவியில் வெற்றிகரமான பல எப்பிசோடுகளைக் கடந்து ஓடியது.

இதையும் வாசிக்கலாமே...

வாடிக்கையாளர்களுக்கு இன்று தான் கடைசி நாள்... பஞ்சாப் வங்கி எச்சரிக்கை!

வாயில் தீ கொண்டு ஓவியர் வரைந்த' தல' படம்... வைரலாகும் மாஸ் வீடியோ!

சவுக்கு சங்கர் மீது சாட்டையைச் சொடுக்கிய உயர் நீதிமன்றம்... வீடியோ வருமானத்தை செலுத்த உத்தரவு!

பெங்களூருவில் மீண்டும் பரபரப்பு... பள்ளி அருகே ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

சிட்டிங் எம்பி-க்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு... பரபரக்கும் திமுக வேட்பாளர் பட்டியல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE