'குட் பேட் அக்லி' பட டைட்டில் எதிரொலியால், தீயை வாயால் பிடித்து நடிகர் அஜித் படத்தை வரைந்து ஓவியர் ஒருவர் அசத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஓவியர் செல்வம். இவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் ஆவார். தற்போது அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்பான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் போஸ்டர் வெளியிட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் படத்தின் தலைப்பே தீயாய் இருப்பதாககூறும் அவர், தீ எரியும் குச்சியை வாயில் வைத்துக்கொண்டு நடிகர் அஜித் படத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார், படத்தின் அப்டேட்டிற்காக கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் தவமாய் தவம் கிடந்து காத்திருக்கின்றனர், இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், அஜித்தின் அடுத்த படமான 'குட் பேட் அக்லி' அறிவிப்பு வெளியாகி ரசிகர்களைக் கொண்டாட வைத்து வருகிறது.
நடிகர் அஜித்தின் 63 வது படமான 'குட் பேட் அக்லி' ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதாகவும், மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை தற்போது இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
'குட் பேட் அக்லி' என பெயரிட்டுள்ள போஸ்டரில் முள்வேலி, துப்பாக்கி போன்ற குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. இதைப் பார்க்கும் போது டைட்டிலே தீயாய் இருக்கு, படமும் ஆக் ஷன் கலந்த தீயாய் இருக்கலாம் என்பதால்.. ஓவியர் செல்வம் தீயைக் குறிக்கும் விதமாக குச்சியின் ஒரு பகுதியை எரிய வைத்து, மற்றொரு பகுதியை வாயில் வைத்துக் கொண்டு தீ எரியும் நெருப்பு பகுதியில் நடிகர் அஜித் உருவத்தை ஐந்து நிமிடங்களில் வரைந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை அஜித் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஷாக்... நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை விமானம்!
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை... பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!
நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல்... 50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!
பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு...தேர்தல் விதிமுறை மீறியதாக அதிரடி!
வனவிலங்குகளுடன் செல்ஃபி எடுக்கப் போறீங்களா?... 7 ஆண்டு சிறை உறுதி!