நடிகர் கார்த்தி என்ன பெரிய சிவாஜியா என கேள்வி எழுப்பியுள்ள இயக்குநர் கரு. பழனியப்பன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை களவாணிப்பய என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
'பருத்திவீரன்' படம் தொடர்பான பிரச்சினையில் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக திரைத்துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிகுமார், கரு. பழனியப்பன், சேரன் எனப் பலரும் அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில் இயக்குநர் கரு. பழனியப்பன் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், " பருத்திவீரனில் என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு அத்தனையுமே தெரியும். ஏனெனில், அந்தப் படத்தில் நான் உதவி இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றியிருந்தேன். பருத்திவீரனில் அவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும்போது அவர் கண்ணுக்கு பன்றிகள் மட்டும்தான் தெரிந்திருக்கிறது.
காமாலை வந்தவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்று சொல்வார்கள். அதுபோல் ஞானவேல் ராஜா ஒரு களவாணி பய. அதனால்தான் பார்ப்பவர்களை எல்லாம் திருடர்களாக தெரிந்திருக்கிறது" என்றார்.
மேலும் அவர் பேசியதாவது, "கார்த்தி என்ன பெரிய சிவாஜி கணேசனா? ஞானவேல் பேசியதற்கு அடுத்த நாளே கார்த்தியோ, சூர்யாவோ, சிவக்குமாரோ பொதுவெளியில் வந்து எங்களுக்கும் அவருக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்ல வேண்டியதுதானே? அப்படி நடக்காதபோதுதான் அவர்கள் பின்னணியில் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. கார்த்தி 25 படங்கள் நடித்திருக்கிறார் என்றால் அதற்கான விதை அமீர் போட்டதுதான்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!
பரபரப்பான டி20 கிரிக்கெட்... தொடரை கைப்பற்றுமா இந்தியா?
கனமழை: சென்னை முழுவதும் பூங்காக்களை மூட உத்தரவு!
இன்று முதல் நடைமுறைக்கு வந்தது... பத்திரப்பதிவு கட்டணத்தில் மாற்றம்!