இயக்குநர் வெற்றிமாறனுடன் ஒரு படம்: ஆசையை வெளிப்படுத்திய ஜூனியர் என்.டி.ஆர்!

By KU BUREAU

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசை விரைவில் நிறைவேறும் என நம்புவதாக நேற்று சென்னையில் நடந்த படவிழாவில் பேசிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். வெளிப்படுத்தியுள்ளார்

கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘தேவரா’ படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பேசுகையில், “சென்னையில் தான் நான் குச்சுப்புடி கற்றுக் கொண்டேன் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். ‘தேவரா’ எந்தளவுக்கு எனக்கு ஸ்பெஷல் என்பதை வார்த்தையில் விவரிக்க முடியாது. படம் சிறப்பாக வர உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லோருக்கும் இந்தப் படம் ஸ்பெஷலானதாக அமையும். திரையரங்கில் நிச்சயம் பாருங்கள். ஜான்வியின் சிறப்பான நடிப்பு உங்களுக்குப் பிடிக்கும். தமிழ் இயக்குநர்களில் வெற்றிமாறன் சாருடன் ஒரு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்தப் படத்தை நாம் நேரடியாக தெலுங்கில் கூட டப் செய்து கொள்ளலாம். இந்த ஆசை சீக்கிரம் நிறைவேறும் என நம்புகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE