சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’

By KU BUREAU

நடிகர் ஆர்ஜே பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கிய படம், ‘மூக்குத்தி அம்மன்’. இதில் நயன்தாரா, மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார். கடந்த 2020-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், வரவேற்பைப் பெற்றது.

இதன் 2-ம் பாகத்தைத் தொடங்க இருப்பதாக வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ஜே.பாலாஜி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுந்தர்.சி இயக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

வேல்ஸ் ஃபிலிம் நிறுவனத்துடன் ரவுடி பிக்சர்ஸ், அவ்னி சினிமேக்ஸ், ஐ வி ஓய் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE