கதறும் ஞானவேல்ராஜா | அம்பானி பேமிலியாச்சே... இந்த சீனெல்லாம் செல்லாது... சமுத்திரக்கனி ஆவேசம்!

By காமதேனு

மழை விட்டும் தூவானம் விடாது என்பதைப் போல இத்தனை வருடங்கள் கடந்தும் ‘பருத்தி வீரன்’ பட பஞ்சாயத்து தீர்க்கப்படாமலேயே நீடித்து வருகிறது. நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் மீதுள்ள மரியாதையால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை இந்த விவகாரத்தில் திரையுலகினர் அதிகம் சீண்டாமல் இருந்து வந்தனர். தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போல, பருத்தி வீரன் படம் குறித்து பேசாமல், இயக்குநர் அமீரை திருடன் என்றெல்லாம் பேசி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டி திரையுலகினரை அதிர செய்தது.

இதனையடுத்து இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, சுதா கொங்கரா, கரு.பழனியப்பன் எனப் பலரும் அமீருக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பகிர்ந்தனர். இதில், இயக்குநர் கரு.பழனியப்பனின் பேச்சு, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை கதற செய்தது என்கிறார்கள் திரையுலகினர். மன்னிப்பு கேட்டு, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி, நடிகர் சிவக்குமார் உத்தரவிட்டும், வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ஞானவேல் ராஜா.

இந்நிலையில், இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் செல்லாது என்று ஆவேசமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி.

இது குறித்து தனது அறிக்கையில், “பொதுவெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்.. அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். நீங்க தான் அம்பானி பேமிலியாச்சே” என்று ஆவேசமாக கூறியுள்ளார் சமுத்திரக்கனி.

இயக்குநர் அமீர் - ஞானவேல் ராஜா

இயக்குநர் அமீர் ‘கார்த்தி 25’ விழாவுக்குத் தனக்கு அழைப்பு வரவில்லை என்று வெளிப்படையாகக் கூறியதே ‘பருத்திவீரன்’ பிரச்சினை பொதுவெளியில் மீண்டும் பூதாகரமாக வெடிக்கக் காரணமாக அமைந்தது.

இதனையடுத்து தயாரிப்பாளராகத் தன்னை ஏமாற்றி, அமீர் பணத்தைத் திருடி விட்டதாக ஞானவேல்ராஜா பேட்டி கொடுக்க, இதற்கு தன் சொந்த பணத்தைப் போட்டு படம் எடுத்ததாக அமீர் விளக்கம் கொடுத்தார். அத்துடன் உண்மை தெரிந்தவர்கள் அமைதியாக இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குநர்கள் சசிக்குமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சுதா கொங்குரா, கரு.பழனியப்பன் என ஒவ்வொருவராக அமீர் பக்கம் வந்து நின்றார்கள். இதில், இது சூர்யா, கார்த்தியின் தூண்டுதலின் பெயரால் நடக்கிறதா? சிவக்குமார் இத்தனைக்குப் பிறகும் மெளனமாக இருப்பது ஏன் என்று பேசியிருந்தது ஞானவேல் ராஜாவைக் கதற வைத்தது என்கிறார்கள்.

’அமீரை அண்ணன் என்று தான் அழைப்பேன்’ என்று ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்திருந்ததை ஏற்றுக் கொள்ளும் முடிவில் கோலிவுட் இயக்குநர்கள் தயாராக இல்லை. இந்த பிரச்சினையில் அமீருக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், ‘பருத்தி வீரன்’ பட ரிலீஸ் சமயத்தில், நடந்த ப்ளாஷ்பேக் காட்சிகளை நினைவுப்படுத்தி, ‘மொத்த பணத்தையும் எடுத்து வெச்சுட்டு, பகிரங்கமாக ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்கும் வரையில் விடுவதாய் இல்லை’ என்கிற முடிவில் இருக்கிறார்கள் தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள்.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை... சீனாவில் வேகமெடுக்கும் புதிய வகை நோய்!

கனமழை... பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தொழிலதிபரைக் கடத்திய 2 பேர் என்கவுன்டர்!

சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை: நீதிமன்றம் அதிரடி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE