பெரியார் நினைவிடத்தில் நேரில் மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்!

By KU BUREAU

தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி பெரியாரின் கருத்துகளைப் பலரும் பகிர்ந்து அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். தவெக தலைவர் விஜயும் தனது எக்ஸ் பக்கத்தில், ’பெரியாரின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதி பாதையில் பயணிப்போம்’ என பெரியாரை நினைவு கூர்ந்து பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தியுள்ளார். தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிலர் விஜயுடன் சென்றிருந்தனர். பெரியார் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார் விஜய்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE