பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

By KU BUREAU

பிரதமர் மோடிக்கு நடிகரும் தவெக தலைவருமான விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். அந்த வகையில், இன்று தனது 74 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்கள் பலரும் மோடிக்கு தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், ‘மதிப்பிற்குரிய இந்திய பிரதமர் மோடிக்கு எனது இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலன், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்’ எனக் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்றும் திராவிட கட்சிகளின் பாணியை விஜய் பின்பற்றுகிறார், அவர் திமுகவின் பி டீம் என பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் அவர் மீது விமர்சனம் வைத்தன. இந்த பேச்சுகளுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் மோடிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE