’அன்னபூரணி’ படத்திற்கு விருது: நயன்தாராவுக்கு முத்தமழை பொழிந்த விக்னேஷ்சிவன்!

By KU BUREAU

நடிகை நயன்தாராவுக்கு ‘அன்னபூரணி’ படத்திற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றிப் பெற்ற படங்களுக்கு துபாயில் சைமா விருதுகள் வழங்கப்பட்டது. தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் வெளியான ‘தசரா’ திரைப்படமும் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படமும் அதிக விருதுகளை குவித்தது. இதில் நடிகை நயன்தாராவின் 75ஆவது படமாக வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

அவருக்கு விருது அறிவிக்கப்பட்டதும் மேடையில் நயன்தாராவுக்கு விக்னேஷ்சிவன் முத்தமழை பொழிந்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ’அன்னப்பூரணி’ படத்தை நயன்தாரா- விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், இதில் இடம்பெற்றிருந்த இந்து கடவுள் தொடர்பான காட்சிகள் சர்ச்சையை கிளப்பியது. இந்தப் படம் ஓடிடியில் வெளியானபோது, படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என சில அரசியல் கட்சிகளும் இந்து அமைப்பினரும் பிரச்சினை செய்ததால் படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது. அந்தக் காட்சிகளை நீக்கிய பிறகே படம் மீண்டும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE