இயக்குநர், நடிகர் சூரியகிரண் இன்று உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட சூரியகிரண் (47) சென்னையில் இன்று காலமாகியுள்ளார். ’மௌன கீதங்கள்’, ’படிக்காதவன்’ என தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சூர்யகிரண். நடிகராக மட்டுமல்லாது, ‘சத்யம்’, ’தனா 51’, ’ராஜூபாய்’ உள்ளிட்ட ஆறு படங்களை இயக்கி இருக்கிறார். நடிகை வரலட்சுமி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்த ’அரசி’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் விரைவில் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.
குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குநராக இரண்டு மாநில விருதும் (நந்தி அவார்டு) பெற்றவர்.
இவருக்கும் ‘சமுத்திரம்’, ‘காசி’ போன்ற படங்களில் நடித்த நடிகை கல்யாணிக்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்தது. ஆனால், திருமணம் முடிந்து சில வருடங்கள் மட்டுமே இவர்களது திருமண வாழ்க்கை நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி பிரிந்துவிட்டது. இதனை சூர்யகிரணும் ஊடகங்களில் உறுதி செய்தார்.
இவர் தெலுங்கு பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். கேரளாவைச் சேர்ந்த இவரது தங்கை சுஜிதாவும் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஜிதா, சின்னத்திரையில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘வதினம்மா’ போன்ற சிரீயல்களில் நடித்திருக்கிறார்.
சூரியகிரண் உடல் நாளை அடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில், ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
தத்துவமேதை சாணக்யரின் வம்சமா தோனி ?! வைரலாகும் ஆய்வு முடிவுகள்!
#Oscars2024 | 7 விருதுகளை வென்று மாஸ் காட்டிய ‘ஓப்பன்ஹெய்மர்’!
டிகிரி படித்திருந்தால் போதும்... இந்திய அரசு நிறுவனத்தில் வேலை!
'அனைவரும் பைத்தியமாகி விட்டனர்'... அமைச்சர் உதயநிதி மனைவியின் ஆவேசப் பதிவு!
திண்டுக்கல்லில் ஜோதிமணி, மயிலாடுதுறையில் திருநாவுக்கரசர்?... தொகுதி மாறும் எம்.பி-க்கள்!