நெட்டிசன்கள் பாய்ச்சல்...'இவர் என்ன அடுத்த டி.ராஜேந்தரா'?

By காமதேனு

இசை, இயக்கம், நடிப்பை அடுத்து தயாரிப்பிலும் இறங்கியுள்ள பிரபல நடிகரை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

இசையமைப்பாளராக தமிழ்த் திரையுலகில் நுழைந்த விஜய் ஆண்டனி நடிப்பு, இயக்கம், படத்தொகுப்பு என அடுத்தடுத்தத் துறைகளிலும் களம் கண்டார்.

இந்த நிலையில் அவர் ‘குட் டெவில்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் தான் நடிக்கும் படம் குறித்து அறிவித்துள்ளார். ’குட் டெவில்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் வெளியாகும் பான் இந்தியன் லவ் டிராமா திரைப்படம் ‘ரோமியோ' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடிக்கின்றனர்.

நடிகை மிர்ணாளினி ரவி

இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் ‘கணம்’ படத்தில் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்கிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். மலேசியா, பாங்காக், ஹைதராபாத், பெங்களூர், தென்காசி மற்றும் மகாபலிபுரம் ஆகிய அழகிய இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ‘லவ் குரு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்து வரும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துகள் ஒரு பக்கம் குவிந்தாலும் இன்னொரு பக்கம் ’இவர் என்ன அடுத்த டி.ஆராக (டி.ராஜேந்தர்) முயற்சி செய்கிறாரா’ எனவும் இணையத்தில் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனியும் ஒரு தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE