ஷாக்... கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய விஜய் டிவி நடிகை!

By காமதேனு

விஜய் டிவி சீரியல் நடிகையான வைஷாலி சமீபத்தில் கார் விபத்தில் சிக்கியதாகவும், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் தான் உயிர் தப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் 'ராஜா ராணி', 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மற்றும் 'மாப்பிள்ளை' ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வைஷாலி. இவர் தற்போது 'முத்தழகு' சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய விஷயத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அண்மையில் தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இந்த கார் விபத்துக்கு உள்ளானதாகவும், சீட் பெல்ட் போட்டிருந்தாலும், ஏர் பேக் சரியாக வேலை செய்ததாலும் தான் உயிர் தப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த விபத்தில் அவரது கழுத்தில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த அவரது தகவலை அடுத்து அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE