கார் விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா

By KU BUREAU

நடிகர் ஜீவா, தனது மனைவியுடன் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் நேற்று வந்து கொண்டிருந்தார். காரை ஜீவா ஓட்டினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, சாலையின் குறுக்கே பைக் ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக ஜீவா சென்ற கார், அந்த பைக் மற்றும் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜீவாவின் மனைவி மற்றும் பைக்கில் வந்த மணிகண்டன் லேசான காயமடைந்தனர். தகவலறிந்து வந்த சின்னசேலம் போலீஸார், ஜீவாவின் மனைவியை சேலம் மருத்துவமனைக்கும், மணிகண்டனை சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE