ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கும் 'தில்ராஜா'!

By KU BUREAU

சென்னை: ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கும் ஆக்ஷன், செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம் ’தில்ராஜா’ இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

’சாக்லேட்’, ’பகவதி’, ’ஏய்’, ’வாத்தியார்’, ’மாஞ்சா வேலு’ உள்ளிட்டப் பல படங்களை இயக்கிய ஏ. வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சத்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவுற்று இந்த மாதம் 27ஆம் தேதி வெயியீட்டிற்கு தயாராக உள்ளது. திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள். நாயகன் விஜய் சத்யா படத்தில் தீவிர ரஜினி ரசிகராக நடித்துள்ளார். அவரோடு இணைந்து நாய் ஒன்றும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்துள்ளது. படம் குடும்பத்தோடு பார்த்து மகிழும்படி இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE