ஜீ தமிழில் சமையல் எக்ஸ்பிரஸ்

By KU BUREAU

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சமையல் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியின் நடுவராக நடிகை சீதா மற்றும் கிருஷ்ணா மெக்கன்ஸி பங்கேற்கின்றனர். ரவுடி பேபி ஆயிஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

இந் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் 2 ஜோடிகள் மோதிக் கொள்ள உள்ளனர். போட்டியாளராக பங்கேற்கும் ஜோடிகள் ரியல் ஜோடிகள், சின்னத்திரை அல்லது வெள்ளித்திரை மூலமாக பாப்புலரான ரீல் ஜோடிகள், நண்பர்கள், உறவினர்களாக இருப்பார்கள். இந்த நிகழ்ச்சி வரும் 15-ம் தேதி முதல் வாரம்தோறும் ஞாயிறன்று மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE