தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு திரைப்படப் பாடகி பி.சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கெளரவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டமளித்தார். முன்னதாக பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பாடகி பி.சுசீலா தனது இருக்கையில் இருந்து எழுந்து வர முடியாத சூழலில் அவரது இருக்கைக்கு அருகில் சென்ற முதல்வர் முனைவர் பட்டத்தை வழங்கிய போது சுசீலா தடுமாறி கீழே விழச் சென்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட முதல்வர் அவரைத் தாங்கிப் பிடித்தார். அப்போது பி.சுசீலா முதல்வருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
இதேபோல இசைக்கலைஞர் பி.எம்.சுந்தரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதையும் வாசிக்கலாமே...
உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ
பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!
ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி