இறப்புக்கு முன் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!

By காமதேனு

’எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்து வந்த மாரிமுத்து தன்னுடைய இறப்புக்கு முன்பு சீரியல் நடிகைக்கு அனுப்பியுள்ள வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் உருக்கமான கமென்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ’எதிர்நீச்சல்’ மூலம் புகழ்பெற்றவர் நடிகர் மாரிமுத்து. இதற்கு முன்பு அவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியல் அவருக்கு பெரும் புகழ் பெற்றுத் தந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் திடீர் நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டார். இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 'எதிர்நீச்சல்' சீரியலில் தனது மகள் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மோனிஷாவுக்கு அவர் அனுப்பியுள்ள வீடியோவை மோனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மோனிஷாவின் சகோதரி பிறந்தநாளை அவர் பிறந்தநாள் என எண்ணி மாரிமுத்து வாழ்த்து கூறி வீடியோ அனுப்பி இருக்கிறார். அதன் பின் பிறந்தநாள் இல்லை என தெரிந்ததும், உன் பிறந்தநாளுக்கு அட்வான்ஸ் ஆக வைத்துக்கொள் என கூறினாராம் மாரிமுத்து.

இதனை நடிகை மோனிஷா தன் பிறந்தநாள் அன்று பகிர்ந்துள்ளார். இந்த வாழ்த்து நேரடியாக சொல்ல மாரிமுத்து உயிரோடு இல்லை எனவும் வருத்தப்பட்டுள்ளார். முன்பே அவர் அனுப்பிய வீடியோவை தற்போது அவர் உருக்கமாக இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்க, ரசிகர்களும் தாங்கள் மாரிமுத்துவை மிஸ் செய்து வருவதாகக் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE