வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும் - ஹெச்.ராஜா திடீர் வலியுறுத்தல்

By காமதேனு

பெண்கள் இல்லையென்றால் ஆண்களுக்கு ஆறுதலே கிடைத்திருக்காது என கவிஞர் வைரமுத்து பேசிய நிலையில், முதலில் சின்மயி குற்றச்சாட்டின் மீது இவரை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹெச்.ராஜா

கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ‘’பேசியே வளர்ந்த திராவிட இயக்கங்களில் இன்றைக்கு பேசவே ஆள் இல்லாத நிலை உள்ளது. பெரியாரையும், அம்பேத்கரையும் நவீனயுகத்திற்கு மாற்ற வேண்டும். நல்ல சிந்தனைகள் மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பெண்கள் இல்லையென்றால் ஆண்களுக்கு ஆறுதலே கிடைத்திருக்காது. ஆனால், பெண்களே இல்லையென்றால் ஆண்களுக்கு ஆறுதலே தேவை இருக்காது’’ என பேசினார்.

அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ‘’முதலில் சின்மயி அவர்களின் குற்றச்சாட்டின் அடிப்படையில் மகளிர் ஆணையம் இவருக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்’’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வைரமுத்து திராவிட போராளி என்ற போர்வையில் ஒளிந்துக் கொண்டிருக்கிறார் என பாடகி சின்மயி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE