'வாய்ப்பே இல்லை’ விஜய்சேதுபதி மீது விரக்தியை வெளிப்படுத்திய சேரன்!

By காமதேனு

‘அதற்கு வாய்ப்பே இல்லை’ என இயக்குநர் சேரன் நடிகர் விஜய்சேதுபதி மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கோலிவுட் தாண்டி, பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. காத்ரீனாவுடன் அவர் நடித்துள்ள ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ இந்த வருடம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், தமிழில் நட்புக்காக சில படங்களில் சிறப்புத் தோற்றத்திலும் அவர் நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான ‘மாவீரன்’ படத்திலும் நட்புக்காக குரல் கொடுத்திருந்தார் விஜய் சேதுபதி.

இதற்கு முன்பு இயக்குநர் சேரன் இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு இது குறித்தான அறிவிப்பும் வெளியானது. ஆனால், அதன் பின்பு அதைப் பற்றி எந்தவொரு அப்டேட்டும் இல்லை. இனி அந்த படம் நடக்குமா என சமீபத்தில் இயக்குநர் சேரனிடம் கேட்கப்பட்ட போது, ‘இனி அந்தப் படம் நிச்சயம் நடக்காது. அதற்கான வாய்ப்பும் இல்லை. ஏனெனில் முன்பு இருந்ததை விட நடிகர் விஜய்சேதுபதி தற்போது பல மடங்கு வளர்ந்து விட்டார். அவர் கால்ஷீட் எனக்கு கிடைக்கவே பத்து வருடங்கள் ஆகும்’ எனத் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE