பில்டப் பண்ணாதீங்க சிவா... சிவகார்த்திகேயனைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

By காமதேனு

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ‘எஸ்கே21’ பட டைட்டில் குறித்தான அறிவிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

’மாவீரன்’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 21வது படத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக இந்தப் படம் உருவாகி வருவதாக சொல்லப்படும் நிலையில், இதன் டைட்டில் எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் & சாய்பல்லவி

அதன்படி, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவ வீரரின் கதை என்பதால் நடிகர் சிவகார்த்திகேயன் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், சிவகார்த்திகேயனின் கெட்டப் படத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருக்கும் என்பதால், அது வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக காஷ்மீரில் நடைப்பெற்று வரும் படப்பிடிப்பு தளங்களிலும் ஏக கெடுபிடி என்கிறார்கள்.

படத்தோட டைட்டில், கெட்டப், ஹேர் ஸ்டைல், ஜிம் வொர்க்-அவுட் என்று ஓவர் பில்டப் பண்ணாதீங்க சிவா... அதுக்கு விஜய், அஜித் படங்கள் இருக்கு. யதார்த்தமா நீங்க இருந்தவரைக்கும் உங்க படங்கள் ஜெயிச்சுது என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE