ஜீவா பட நாயகிக்கு திருமணம்: நடிகர், நடிகைகள் நேரில் வாழ்த்து!

By காமதேனு

பிரபல திரைப்பட நடிகை கார்த்திகா நாயரின் திருமணம் திருவனந்தபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் கார்த்திகா. தமிழில் ஜீவாவின் 'கோ' படம் மூலம் அறிமுகமான இவர், ஜூனியர் என்டிஆர் நடித்த 'தம்மு' படத்திலும் நடித்துள்ளார். இவர் 80 காலக் கட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த ராதாவின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திரையுலகில் 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான கார்த்திகாவுக்கு தொடர்ந்து போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் தந்தையும், தொழிலதிபருமான ராஜசேகரன் நாயருடன் இணைந்து பிசினஸில் ஈடுபட்டு வந்தார்.

திருமண விழாவில் சிரஞ்சீவியுடன் ராதிகா.

இந்த நிலையில் கார்த்திகாவுக்கும், ரோகித் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் கார்த்திகா வெளியிட்டதுடன், உன்னை சந்திக்க வேண்டும் என்று விதி எழுதப்பட்டு உள்ளது. உன்னை விரும்பியது மேஜிக் போல் நிகழ்ந்தது. உன்னுடன் இணைந்து பயணிப்பதற்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது" என்று பதிவிடிருந்தார்.

இந்நிலையில், அந்த கவுன்டவுன் இன்று நிறைவடைந்தது. அதாவது கார்த்திகா-ரோகித் திருமணம் திருவனந்தபுரத்தில் ராதாவுக்கு சொந்தமான ஓட்டலில் இன்று பிற்பகல் நடந்தது. விழாவில் நடிகர் சிரஞ்சீவி, மோகன்லால் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

கார்த்திகா திருமணத்தில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள்

நடிகைகள் ராதிகா, ரேவதி, சுஹாசினி, கவுசல்யா உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர். திருமண விழாவில் பங்கேற்ற விருந்தினர்களை ராதாவின் சகோதரியும், நடிகையுமான அம்பிகா மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE