முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலை கடந்த நடிகர் விஜயின் ‘GOAT'!

By KU BUREAU

சென்னை: நடிகர் விஜயின் 'GOAT' படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், சிநேகா, லைலா, பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்டப் பலர் நடிப்பில் நேற்று 'GOAT' படம் வெளியானது. படத்தில் விஜயகாந்த், த்ரிஷா, சிவகார்த்திகேயன் எனப் பல சர்ப்ரைஸான விஷயங்களை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார் வெங்கட்பிரபு.

தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பு விஜயின் டீ-ஏஜிங் தோற்றத்திற்கு பல நெகட்டிவான விமர்சனங்கள் வந்தது. ஆனால், படம் வெளியான பின்பு பெரும்பாலான ரசிகர்களை விஜயின் டீ-ஏஜிங் தோற்றம் திருப்பதி படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 'GOAT' திரைப்படம் ரூ. 126 கோடி வசூல் செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. முதல் நாளிலேயே ரூ. 100 கோடி வசூலை கடந்திருப்பது ரசிகர்களைக் குஷிப்படுத்தியிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை, வார இறுதி நாள் என்பதால் வரும் நாட்களில் படம் இன்னும் அதிக வசூலை ஈட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE