மாம்போ படத்துக்காக நிஜ சிங்கங்களுடன் 15 நாள் பயிற்சி

By KU BUREAU

இயக்குநர் பிரபு சாலமன் அடுத்து இயக்கும் படம், 'மாம்போ’. இதற்கு முன் யானையை வைத்து கும்கி, காடன் படங்களை இயக்கிய இவர் இப்போது சிங்கத்தை வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார்.

நடிகர் விஜயகுமாரின் பேரனும் நடிகர் ஆகாஷின் மகனுமான விஜய் ஸ்ரீ ஹரி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். சிறுவனுக்கும் சிங்கத்துக்கும் இடையேயான உறவை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு வரும் 25-ம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது.

நிஜ சிங்கங்களுடன் நெருக்கமான காட்சிகள் இருப்பதால், படக்குழுவினர் 15 நாட்கள் அவற்றுடன் பழக உள்ளனர். அதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இயக்குநர் பிரபு சாலமன், விஜய் ஸ்ரீ ஹரி, ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினர் வரும் 10-ம் தேதி துபாய் செல்கின்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE