அடடே மனோகர் திடீர் மறைவு... ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள்!

By காமதேனு

பிரபல சின்னத்திரை மற்றும் நாடக நடிகரான அடடே மனோகர் காலமானார். சென்னையைச் சேர்ந்த மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அவர், பணிக்கிடையே நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.

சுமார் 3,500-க்கும் மேற்பட்ட முறை மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதில் 6 நாடகங்களை இவரே எழுதி இயக்கி நடித்தார். நகைச்சுவை பாத்திரங்களை இவர் விரும்பி ஏற்று நடித்தார். மேடையிலேயே நேரடியாக பாடி நடிப்பதும் இவரது தனிச்சிறப்பு. வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும், நடித்தும் உள்ள இவர், கிட்டதட்ட 15 தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

நடிகர் அடடே மனோகர்

'அடடே மனோகர்’ என்ற பெயரில் 1986 மற்றும் 1993-ஆம் ஆண்டில் அப்போதைய டிடி தொலைக்காட்சியில் நாடகம் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 35-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். நடிகர் வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இவர் நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி காலமானார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர், நேற்று இரவு காலமானார். இதையடுத்து மனோர் உடல் சென்னை குமரன்சாவடியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனோகர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


“28 பைசா மோடி...” தெறிக்கவிடும் உதயநிதி ஸ்டாலின்!

குட் நியூஸ்... புற்றுநோயை குணப்படுத்த மாத்திரை போதும்... டாடா இன்ஸ்டிட்யூட் சாதனை!

பாலத்தை உடைத்துக் கொண்டு பாய்ந்த பேருந்து... 31 பேர் பலியான கொடூர விபத்து!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை... லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

ஈரோடு ஸ்தம்பித்தது... ரூ.300 கோடி இழப்பு; 50,000 விசைத்தறிகள் வேலைநிறுத்தம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE