நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!

By காமதேனு

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களிடையே அவ்வப்போது மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த வாரம் அர்ச்சனா மற்றும் மாயா கேங்க் மோதிக் கொண்ட நிலையில், இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் தினேஷ் - விஷ்ணு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் இல்லம்

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் நாளிலிருந்து இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக வருகிறது. போட்டியாளர்களுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த வாரம் தினேஷ் கேப்டனாதில் இருந்து அவர் ரொம்ப கடுமையாக நடந்துக் கொள்கிறார் என போட்டியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தினேஷ் - பூர்ணிமா இடையே மோதல் போக்கு என்பது நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் தினேஷும் - விஷ்ணுவும் மோதிக் கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. சீக்ரெட் டாஸ்க் யாரும் முறையாக செய்யவில்லை என தினேஷ் குற்றம் சாட்டுகிறார்.

அதற்கு தினேஷுக்கு கேரக்டர் கொடுங்கப்பான்னு சொல்ல மோதல் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, தினேஷ், 'டேய்' என விஷ்ணுவை கூப்பிட்டதாக தெரிகிறது, அதற்கு விஷ்ணு 'டேய்' என்று சொல்லாத எனக் கூறுகிறார். இன்று வெளியாகியுள்ள இந்த ப்ரோமோவால் இன்றைய பிக்பாஸ் சீசன் 7 அதகளப்படப் போகிறது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!

மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE