‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தில் டார்க் காமெடி

By KU BUREAU

பேய் இருக்க பயமேன்' படத்தை இயக்கி நடித்த சீ.கார்த்தீஸ்வரன், அடுத்து இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘நிர்வாகம் பொறுப்பல்ல'. லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே.ட்ரீம் பேக்டரி சார்பில் டி.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்தப் படத்தை எம்.புவனேஸ்வரன், ஷாஜு சி இணைந்து தயாரித்துள்ளனர்.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.“உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் இது. மக்களை ஏமாற்றி எப்படி பணம் பறிக்கிறார்கள் என்பதை டார்க் காமெடி வகையில் இந்தப் படம் சொல்லும். சில நிறுவனங்களில் பணத்தை நிஜமாக பறிகொடுத்தவர்களும் இதில் நடித்துள்ளனர்” என்றது படக்குழு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE