பாலிவுட் இயக்குநருடன் நடிகர் ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் கைகோத்துள்ளார். இந்த விஷயம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பல வருடங்களுக்குப் பிறகு நேரடி பாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த செய்தி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘லால் சலாம்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பிற்காக இவர் இன்று அதிகாலை ஹைதராபாத் கிளம்பிச் சென்ற நிலையில் இப்போது இவரது புது பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் சஜித் நாடியாட்வாலா. இவருடன் தான் நடிகர் ரஜினிகாந்த் புதிய படத்தில் கைகோத்துள்ளார். இந்த செய்தியை இயக்குநர் சஜித் ரஜினியுடன் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தபோது எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து உறுதி செய்திருக்கிறார். மேலும், ‘லெஜென்ட் ரஜினி சாருடன் இணைந்திருப்பது எனக்குப் பெருமையான விஷயம். இந்த மறக்க முடியாத பயணத்தை ஒன்றாகத் தொடங்குவதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்’ எனக் கூறியுள்ளார்.
சஜித் இயக்கம் மற்றும் தயாரிப்பில் பாலிவுட்டில் ‘கிக்’, ’ஹவுஸ்ஃபுல் சீரிஸ்’, ’ஜுட்வா 2’ மற்றும் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவரது தயாரிப்பில் விரைவில் ’சந்து சாம்பியன்’ மற்றும் ’ஹவுஸ்ஃபுல் 5’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ‘அந்தா கனூன்’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த சில வருடங்களில் அவர் சிறப்புத் தோற்றத்தில்தான் இந்தியில் நடித்திருந்தார். இப்போது அவர் சஜித்துடன் ஒப்பந்தமாகி இருக்கும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றமா அல்லது அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கப் போகிறது என்ற விவரம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் மோடி வருகை... தமிழக காங்கிரஸ் தலைவருக்கு வீட்டுக் காவல்!
கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த ஏ.ஆர்.ரஹ்மான்... சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு!
திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி...செல்வப்பெருந்தகை டெல்லி பயணம்!
தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட்நியூஸ்... தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு!
தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் கொலையில் திடீர் திருப்பம்...பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்குத் தொடர்பு!