’எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை மதுமிதா, குடிபோதையில் ஆண் நண்பர் ஒருவரோடு காரில் சென்று கொண்டிருந்தார். இவர்களது கார், சாலையில் எதிர்திசையில் தவறாக சென்று கொண்டிருந்த போது, எதிரே பைக்கில் வந்த காவலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த காவலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வார இறுதி நாட்களில் சென்னை கடற்கரை சாலைப் பகுதியில் குடிபோதையில் தொடர்ந்து விபத்துகளும் அசம்பாவிதங்களும் நடைப்பெற்று வருகின்றன. அப்படி குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி, சிக்கலில் சிக்கித் தவிக்கிறார் சீரியல் நடிகை மதுமிதா.
‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை மதுமிதா, கடந்த ஆண்டு புதிய கார் வாங்கியிருந்தார். இந்த காரில் அவருடைய ஆண் நண்பரோடு சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் ஒருவழிப் பாதையில் பயணப்பட்டிருக்கிறார் மதுமிதா.
மதுமிதாவும் கேரளாவைச் சேர்ந்த அவரது ஆண் நண்பரும் மது அருந்தி இருந்தனர். அதிவேகமாக ராங் ரூட்டில் கார் சென்ற போது, எதிரே பைக்கில் வந்த போலீஸார் மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த காவலர், அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்த ஒரு சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தி இருக்கின்றனர். அப்போது மதுமிதாவும், அவருடைய ஆண் நண்பரும், “எங்கள் மீது தப்பில்லை, போலீஸார் தான் வேகமாக வந்து காரில் மோதிவிட்டார்” என வாக்குவாதம் செய்திருக்கின்றனர். உடனடியாக மதுமிதாவையும் அவருடைய ஆண் நண்பரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவர்களது காரையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
தற்போது சிகிச்சைப் பெற்று வரும் காவலர், ஆபத்தான நிலையில் இருப்பதால், குடிபோதையில் வாகனத்தை இயங்கியது, விபத்தை ஏற்படுத்தியது என சிக்கலில் இருக்கும் நடிகை மதுமிதா விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் மோடி வருகை... தமிழக காங்கிரஸ் தலைவருக்கு வீட்டுக் காவல்!
கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த ஏ.ஆர்.ரஹ்மான்... சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு!
திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி...செல்வப்பெருந்தகை டெல்லி பயணம்!
தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட்நியூஸ்... தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு!
தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் கொலையில் திடீர் திருப்பம்...பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்குத் தொடர்பு!