நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டை படக்குழு கொடுத்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படம் குறித்த சூப்பர் அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில் நடிகர்கள் தனுஷ், பிரியங்கா அருள்மோகன் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்தக் கதை மூன்று பாகங்களாக வெளிவர இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நடிகர் தனுஷின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூலை 28ம் தேதி ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. சமீபத்தில் படத்தின் எக்ஸ்ளூசிவ் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது என்பதையும் தெரிவித்தது.
தற்போது இந்தப் படத்தின் முதல் பாடல் குறித்தான அப்டேட்டை அதன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 'இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் … புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் ….
நாந்தாண்டா நீதி ….
நாந்தாண்டா நீதி ….' என்ற பாடல் வரிகளைக் குறிப்பிட்டு இந்தப் பாடலைப் பாடியவர் தனுஷ் என்ற விஷயத்தையும் பகிர்ந்துள்ளார் ஜிவி பிரகாஷ். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!
நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!
பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!