கல்யாணம், கருமாதி, பிறந்த நாள்னு ரேபிஸ்ட்டுக்கு பரோல்... கொந்தளித்த பாடகி சின்மயி!

By காமதேனு

பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கு 10 நாள் பரோல் வழங்கப்பட்டதற்கு பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பில்கிஸ் பானு

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது நடைபெற்ற கலவரத்தில் பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்த 11 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் 2022 ஆகஸ்ட் 15-ம் தேதியன்று குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனையடுத்து, 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள்

இதையடுத்து ஜனவரி 8-ம் தேதி அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது. பில்கிஸ் பானு வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றதால் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்குதான் உள்ளது. எனவே குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட 11 பேரும், அடுத்த 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்" என உத்தரவிட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஜனவரி 21-ம் தேதியன்று கோத்ரா துணை சிறைச்சாலையில் சரணடைந்தனர்.

குஜராத் உயர் நீதிமன்றம்

இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளில் ஒருவரான, ரமேஷ் பாய் சந்தனா, மார்ச் 5-ம் தேதி நடைபெறும் தனது சகோதரியின் மகன் திருமணத்தில் பங்கேற்பதற்காக குஜராத் உயர் நீதிமன்றத்தில் 10 நாட்கள் பரோல் கேட்டு கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், அவருக்கு நேற்று முன்தினம் பரோல் வழங்க உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்தான் இவ்வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளிகளில் ஒருவரான பிரதீப் மோதியா என்ற குற்றவாளி, தனது மாமனாரின் இறப்புக்காக பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை பரோலில் வெளியே வந்தார்.

பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அடுத்தடுத்து பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்ததற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயி

இந்த நிலையில், பாடகி சின்மயி தனது கண்டனத்தை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில்," கல்யாணம், கருமாதி, பிறந்த நாள்னு ஊர்ல இருக்க கன்விக்ட் செய்யப்பட்ட ரேபிஸ்ட்க்கு பரோல், ஓ பரோல் தான். இது தான் இந்திய ரேப் கல்ச்சர்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று தொடங்குகிறது திறன் மதிப்பீட்டுத் தேர்வு!

திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

லண்டனில் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்; கதறும் பெற்றோர்!

ஹரியாணாவில் பயங்கரம்... பிரபல அரசியல் கட்சி தலைவர் சுட்டுக்கொலை!

அடுத்தடுத்து பெண்களைக் கொன்று உடலை டிரம்மில் அடைத்து வீசும் கொடூரம்... பெங்களூருவில் பரபரப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE