24 கேரட் தங்கத்தில் ரூ.3 கோடிக்கு பிறந்த நாள் கேக்... நடிகைக்கு பரிசாக வழங்கிய பிரபல பாடகர்!

By காமதேனு

'லெஜண்ட்’ படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஊர்வசி ரவ்தேலா. இவர் தன்னுடைய பிறந்தநாளுக்காக வெட்டிய தங்கக் கேக்கின் விலை ரூ. 3 கோடி என்பதுதான் இப்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

கேக்குடன் ஊர்வசி, ஹனி சிங்

சினிமாவில் கவனத்தை ஈர்ப்பதற்காக பிரபலங்கள் அவ்வப்போது விசித்திரமாக எதையாவது செய்வதுண்டு. இது பல சமயங்களில் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவாக பேசுபொருளானாலும் மற்றொரு சமயம் நெகட்டிவாக அமைவதும் உண்டு. அப்படித்தான், ‘லெஜண்ட்’ பட நாயகி ஊர்வசி ரவ்தேலா செய்துள்ள செயல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது ஊர்வசி ரவ்தேலா தன்னுடைய 30வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

தற்போது பிரபல பாலிவுட் பாடகர் யோ யோ ஹனி சிங் உருவாக்கத்தில் மார்ச் 15 அன்று வெளியாக இருக்கும் ‘லவ் டோஸ்2’ பாடலுக்காக பிஸியாக இருந்தவருக்கு ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்த அவரது நண்பர்களும் ஊர்வசி ரவ்தேலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தங்கள் கதாநாயகிக்கு பிறந்தநாள் என்பதால் பாடல் படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ‘லவ் டோஸ்2’ குழுவினர் நடத்தியிருக்கிறார்கள்.

நடிகரும், பாடகருமான ஹனி சிங்குடன் சேர்ந்து ஊர்வசி ரவ்துலா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். கிட்டத்தட்ட 72 மணிநேரம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடந்த பிறகு ஊர்வசியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்திருக்கிறது. பொதுவாக படப்பிடிப்புத் தளத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் கேக் வெட்டிக் கொண்டாடுவார்கள்.

இங்கும் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால், அவர் வெட்டிய கேக்தான் இங்கு ஹைலைட். அதாவது, ஊர்வசி தன்னுடைய பிறந்தநாளுக்கு 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட கேக்கை தான் வெட்டியுள்ளார். அந்த தங்கக் கேக்கின் விலை மட்டும் ரூ.3 கோடி என்ற விஷயம்தான் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

இந்தக் கேக்கை ஹனி சிங்தான் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்திருக்கிறாராம். இந்தப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஊர்வசி தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று தொடங்குகிறது திறன் மதிப்பீட்டுத் தேர்வு!

திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

லண்டனில் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்; கதறும் பெற்றோர்!

ஹரியாணாவில் பயங்கரம்... பிரபல அரசியல் கட்சி தலைவர் சுட்டுக்கொலை!

அடுத்தடுத்து பெண்களைக் கொன்று உடலை டிரம்மில் அடைத்து வீசும் கொடூரம்... பெங்களூருவில் பரபரப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE