விரைவில் தொடங்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இரண்டாவது சீசன்?

By காமதேனு

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இரண்டாவது சீசன் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அண்ணன், தம்பி பாசம் என கூட்டுக் குடும்பத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரக்கூடிய இந்த சீரியல் விரைவில் முடிய இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அது முடிவை எட்ட இருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்தியில் ’பாண்டயா ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி முடிவுற்று, குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது என்ன நடக்கிறது என்ற டிராக்கில் இரண்டாம் பாகத்தின் கதை ஒளிபரப்பாகி வருகிறது.

இதுபோலவே, தமிழிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக வாய்ப்பிருக்கிறக்கிறதா என ரசிகர்கள் தொலைக்காட்சி தரப்பினரிடம் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் விரைவில் இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பாகும் என எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE