தனது தாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்கு அவரை அழைத்து சென்றிருக்கிறார்.
அவருடன் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் ஆகியோரும் இணைந்துள்ளனர். ஜூனியர் என்டிஆர் தாயாருக்கு உடுப்பியில் இருக்கும் கிருஷ்ணர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது. இன்று தனது தாயாரின் பிறந்தநாள் என்பதால், அம்மாவுக்கு சிறந்த கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்று அவரது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் ஜூனியர் என்டிஆர்.
இந்தப் பயணத்தில் உடன் இருந்து சிறப்பித்துக் கொடுத்த இயக்குநர் பிரஷாந்த் நீல் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார்.
இவர்கள் மூவரும் இணைந்து வாழை இலையில் கோயிலில் பிரசாதமும் சாப்பிட்டிருக்கிறார்கள். இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களையும் நேரில் பார்த்த ரசிகர்கள், அவர்களுடன் செல்ஃபி எடுக்க குவிந்ததால் சிறிது நேரம் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
» சினிமாவில் அதிகார மையம் கிடையாது: மனம் திறந்தார் மம்முட்டி
» ‘பாலியல் குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக சந்திப்பேன்’ - நடிகர் ஜெயசூர்யா தகவல்