பிக் பாஸ்7: வைரலாகும் வீடியோ; கட்டிப்பிடிச்சப்போ எனக்கு என்னவோ ஆயிடுச்சு... அதிர வைத்த விக்ரம்!

By காமதேனு

பிக்பாஸ் சீசன் 7 - ல் போட்டியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம் விக்ரம் சக போட்டியாளரான பூர்ணிமாவிடம் ஆபாசமாக பேசும் வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 7 காதல், சண்டை என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாயா, பூர்ணிமா,ஜோவிகா உள்ளிட்ட போட்டியாளர்கள் உரிமைக்குரல் எழுப்பிய நிலையில், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டதில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சிலர் செய்யும் செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

ஏற்கெனவே நிக்சன் மற்றும் ஐஷூ இருவரும் நெருங்கி பழகி எப்போதும் தொட்டு தடவி பேசிக் கொண்டிருப்பது குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் தொடர்ச்சியாக கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர் பிரபலம் விக்ரம், கடந்த சில தினங்களுக்கு முன்பு, டைட்டில் வின்னர் சரவண விக்ரம் என கூறிய வீடியோவை ட்ரோல் செய்த நெட்டிசன்கள், மிச்சர் மாமாவுக்கு டைட்டில் வேறையா என கிண்டலடித்து மீம்ஸ் தெறிக்கவிட்டனர். இந்த நிலையில், மிச்சர் மாமா இல்லை மிட் நைட் மாமா என்கிற வகையில், விக்ரமின் மற்றொரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் பூர்ணிமா பெட்டில் படுத்து இருக்கும் போது பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் விக்ரம், பூர்ணிமாவிடம் ’’எனக்கு உன்னை ஏற்கெனவே ரொம்ப பிடிக்கும். ஆனால் அன்னைக்கு நீ என்ன கட்டி பிடிச்ச போது எனக்கு ஒரு மாதிரி ஆகிட்டு’’ என்றார். அதற்கு பூர்ணிமா, என்ன மூடு ஆகிட்டியா என கேட்கிறார். அதற்கு விக்ரம் அப்படி எப்படின்னு என்னால சொல்ல முடியல. ஆனா ஒரு மாதிரி இருந்து. ஏற்கெனவே உன்னை பிடிக்கும். ஆனாலும் அதையெல்லாம் மனசுக்குள்ள மறைச்சு வச்சுட்டு தான், நான் அங்கே இங்கே சாப்பிட்டுவிட்டு அப்படி இப்படி நடந்துக்கிட்டே இருந்தேன். ஆனால் நீயா வந்து என்னை கட்டிப்பிடித்த போது எனக்குள் வந்த ஃபீலிங்கை சொல்ல முடியல’’ என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE