சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே விருது வென்ற நயன்தாரா... குவியும் வாழ்த்து!

By காமதேனு

’ஜவான்’ படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு இந்த ஆண்டிற்கான 'தாதா சாகேப் பால்கே விருது' வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தை நடிகை நயன்தாரா பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நயன்தாரா

விருதுகளும் அங்கீகாரமும் திரைக்கலைஞர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய ஒன்று. அப்படி இருக்கையில், மும்பையில் 2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ’ஜவான்’ படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கான் அவருக்கு வழங்கினார். இந்தப் புகைப்படங்களை நடிகை நயன்தாரா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, ‘தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் ‘ஜவான்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளேன்’ எனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கோலிவுட்டில் ’லேடி சூப்பர் ஸ்டார்’ எனப் பெயர் எடுத்தப் பின்பு பாலிவுட்டில் மாஸாக நயன்தாரா என்ட்ரி கொடுத்தப் படம்தான் ‘ஜவான்'. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான விருது பெறுவதற்காக நடிகை நயன்தாரா நேற்று மும்பை சென்றிருந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இப்போது அவர் விருது வென்றுள்ளதற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE