இன்ஸ்டாகிராமில் கோடிகளில் வருமானம்... ஷாருக்கானை முந்திய பிரியங்கா சோப்ரா!

By காமதேனு

இன்ஸ்டாகிராம் மூலம் கோடிகளில் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா ஷாருக்கானை முந்தியுள்ளார்.

ஒரு பொருளையும் பிராண்டையும் விளம்பரப்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் தளத்தைப் பயன்படுத்தி பல பிரபலங்களும் கோடிகளில் சம்பாதித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களுக்கு இருக்கும் புகழ், இன்ஸ்டாகிராமில் அவர்களைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை வைத்து இந்த பிராண்டுகளை அவர்களை அணுக அதற்கேற்ப அவர்களும் அந்தப் பொருளை விளம்பரப்படுத்தத் தங்களது சம்பளத்தை முடிவு செய்கின்றனர்.

நடிகை தீபிகா படுகோனே

அந்த வகையில், டாப் லிஸ்ட்டில் இருக்கும் பாலிவுட் பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் 3 கோடி ரூபாயை சம்பாதிக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 89.8 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். இவருக்கு அடுத்து தீபிகா படுகோனே இருக்கிறார்.

நடிகை அலியா பட்

இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் மூலம் 1.5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். ஷ்ரதா கபூர் 1.18 கோடி ரூபாயும் அலியா பட் ஒரு கோடி ரூபாயும் ஷாருக்கான் 80 லட்ச ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE