’தங்கலான்’ படக்குழுவினர் 600 பேருக்கு தடபுடலாக விருந்து வைத்த விக்ரம்!

By KU BUREAU

'தங்கலான்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினருக்கு நடிகர் விக்ரம் தடபுடலான விருந்து வைத்துள்ளார்.

பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. இந்தியிலும் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாக இருப்பதால் படக்குழு மும்பையில் புரோமோஷன் வேலைகளை முடித்து சென்னை திரும்பியுள்ளது.

நில அரசியல், கோலார் வயல்களில் தங்கம் எடுக்க மக்கள் பட்ட கஷ்டம் போன்ற விஷயங்களை மையமாக வைத்து இந்தப் படம் வெளியானது. பாக்ஸ் ஆஃபிஸில் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி வசூலை இந்தப் படம் நெருங்குகிறது.

மும்பையில் இருந்து சென்னை திரும்பியதும் நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவுக்கு தடபுடலாக அசைவ விருந்து வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 600 பேர் இந்த விருந்து உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். தன் கையால் படக்குழுவினருக்கு விக்ரம் விருந்து பரிமாறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE