புதுச்சேரி துணைநிலை ஆளுநரை சந்தித்த நடிகர் விஜய்சேதுபதி!

By KU BUREAU

புதுச்சேரி துணைநிலை ஆளுநரை நடிகர் விஜய்சேதுபதி நேரில் சந்தித்துப் பேசினார்.

படப்பிடிப்பில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று புதுச்சேரி சென்றிருந்த நடிகர் விஜய்சேதுபதி, மரியாதை நிமித்தமாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் சந்தித்துப் பேசினார்.

நடிகர் விஜய் சேதுபதியுடனான சந்திப்பின் புகைப்படங்களை கைலாஷ்நாதன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ’பிரபல இந்திய நடிகர், தயாரிப்பாளர் விஜய்சேதுபதியை பாண்டிச்சேரி, ராஜ்நிவாஸ் அலுவலகத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் அன்பான உரையாடலாக அமைந்தது’ என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE