அப்பளமாய் நொறுங்கிய கார்: நடிகர் சம்பத்ராம் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

By KU BUREAU

'தங்கலான்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்த நடிகர் சம்பத்ராமின் கார் விபத்தில் சிக்கி இருக்கிறது.

’முதல்வன்’, ‘வல்லரசு’, ‘தீனா’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் சம்பத்ராம். சமீபத்தில் வெளியான ‘தங்கலான்’ படத்திலும் அவர் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். நேற்று சென்னை, கிண்டி அருகில் இவர் காரில் பயணித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவரது கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

பின்னால் வந்துள்ள லாரி மோதியதில் இவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. காரில் பயணித்த சம்பத்ராம் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருடைய கார் அப்பளம் போல நொறுங்கி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சம்பத்ராம் தற்போது சிகிச்சை முடித்து நலமுடன் இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE