வெற்றி துரைசாமியின் மறைவை அடுத்து அவரது இறுதிச்சடங்கில் நடிகர் அஜித் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பரகிரப்பட்டு வருகிறது.
சென்னை முன்னாள் மேயரும், மனிதநேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வெற்றி துரைசாமியின் உடல் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது. 45 வயதான வெற்றி துரைசாமியின் இந்த எதிர்பாராத மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இவர் தனது தந்தையின் ஐஏஎஸ் நிறுவனத்தைக் கவனித்து வந்தார். மேலும், ‘என்றாவது ஒரு நாள்’ என்ற படத்தையும் இவர் இயக்கியுள்ளார். வெற்றி துரைசாமியின் சடலத்தை மீட்டு சிம்லா இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை 5 மணியளவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஆறு மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது.
அரசியல் தலைவர்கள் பலரும் இவரது மறைவுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தி வரும் நிலையில், தனது நண்பரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் அஜித் நேரில் வந்துள்ளார். இந்த வீடியோ இப்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மேலும், ’வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும், சிறந்த சாகசங்களுக்காகவும்’ என்ற கேப்ஷனுடன் வெற்றி துரைசாமி முன்பு அஜித்துடன் எடுத்தப் புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!
வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!
பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!