’டெவில்’ பட மேடையில் இயக்குநர் மிஷ்கின் திருநங்கைகளுக்காகக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கினின் தம்பி ஆதித்யா ‘டெவில்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இயக்குநர் மிஷ்கின் இதன் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். பூர்ணா, விதார்த் உள்ளிட்டப் பலரும் இதில் நடித்திருக்கின்றனர்.
இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் பாலா, ஆர்.கே.செல்வமணி, வெற்றிமாறன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “எனக்கு எப்போதுமே திருநங்கைகள் மீது தனி மரியாதையும் அன்பும் உண்டு. அதனால், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தில் திருநங்கைகளை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்படும்” எனக் கோரிக்கை வைத்தார். அவருடைய கோரிக்கையை இதே மேடையில் ஏற்று கொள்வதாக நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
நாளை இரவு வரை 66 ரயில்கள் ரத்து... பயணத்தை திட்டமிட்டுக்கோங்க!
அதிர்ச்சி... கழுத்தில் காயங்களுடன் பிரபல நடிகை உயிரிழப்பு! மர்ம மரணமாக வழக்குப்பதிவு!
அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துடன் ஏலக்காய்... சபரிமலையில் 6,65,000 அரவணை பாயாச டின்களை அழிப்பு!