தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகள் பெயரில் சமூக வலைதளப்பக்கத்தை தொடங்கி லட்சக்கணக்கில் பணவசூலில் ஈடுபடுவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 'ராஜகுமாருடு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகிய 'புகாரி', 'ஒக்கடு', 'அத்தடு' போன்ற திரைப்படங்கள் வசூலை வாரிக்குவித்தன.
மகேஷ் பாபு நடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்ததால் தெலுங்கில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக நடித்து வந்த மகேஷ்பாபு கடந்த 2000-ம் ஆண்டில் தெலுங்கு நடிகை நர்மதாவுடன் 'வம்சி' படத்தில் நடித்தார். அதில் நடிக்கும்போது காதல் ஏற்பட்டு கடந்த 2005-ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிகளுக்கு கௌதம் என்ற மகனும், சித்தாரா கட்டமேனி(12) என்ற மகளும் உள்ளனர்.
சித்தாராவிற்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடன வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அத்துடன் பிஎம்ஜே ஜூவல்லரியின் பிராண்ட் தூதராக சித்தாரா உள்ளார்.
இந்த நிலையில், சித்தாரா பெயரில் சிலர் சமூக வலைதளங்களில் போலிக் கணக்கைத் தொடங்கி பணவசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனமான ஜிஎம்பி என்டர்டெயின்மென்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மோசடி செய்தவர்களைக் காவல் துறை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த நிலையில், தனது மகள் பெயரில் சமூக வலைதளங்ளில் போலிக் கணக்கு தொடங்கி லட்சக்கணக்கில் பணம் பெற்று சிலர் மக்களை ஏமாற்றி வருவதாக நடிகர் மகேஷ்பாபு போலீஸில் புகார் அளித்துள்ளார். இப்புகார் குறித்து மடப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் மகள் பெயரில் நடைபெற்று வரும் ஆன்லைன் மோசடி குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!
ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!
ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!
அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!