எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஹேமா கமிட்டி குறித்து நடிகர் நானி!

By KU BUREAU

நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஹேமா கமிட்டி அறிக்கைக் குறித்து நடிகர் நானி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி கேரள சினிமாத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் பல நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு பல முன்னணி நடிகர்களால் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இந்த விஷயம் இந்தியத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி நடிகர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

நடிகர் நானி ஹேமா கமிட்டி பற்றிப் பேசும் போது, “இந்த அறிக்கையைப் படித்த போது என் இதயமே நொறுங்கி விட்டது. ஆனால், இது போன்ற விஷயங்கள் என்னைச் சுற்றியோ என் செட்டிலோ நடந்தது இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

சினிமாவை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டும் என்று நினைக்கும் போது இதுபோன்ற விஷயங்கள் நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது. நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் எப்போதும் எச்சரியாகை இருக்க வேண்டும் என்பதையே இந்த அறிக்கை உணர்த்துகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE