கேரளத்தில் எல்லா நடிகைகளும் அட்ஜெஸ்மெண்ட் செய்கிறார்களா? - நடிகை பார்வதி கருத்து

By KU BUREAU

கேரளாவில் எல்லா நடிகைகளும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள் என்பது போன்ற பொது பிம்பம் இருப்பது தவறானது என நடிகை பார்வதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் அமைந்த ஹேமா கமிட்டி கேரள திரையுலகில் பல நடிகைகளும் பாலியல் ரீதியான துன்புறுத்தலை அனுபவிக்கிறார்கள் என்றும் நடிகைகளில் இருந்து பெண் கலைஞர்கள் வரை பலருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பல முன்னணி நடிகர்களே சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கும் அந்த அறிக்கை அதிகார வர்க்கத்திடம் கேரள சினிமா சிக்கியிருப்பதாகவும் பாலியல் இச்சைகளுக்கு உடன்படும் நடிகைகளுக்கே அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

ஹேமா கமிட்டியின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பிய இருக்கிறது. இதுபற்றி நடிகை பார்வதி சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்திருக்கிறார். “ஹேமா கமிட்டி அறிக்கையால் ஒட்டுமொத்த கேரள சினிமாவிலும் பிரச்சினை என்பது போன்ற பிம்பத்தைப் பலரும் உருவாக்குகிறார்கள். அப்படி கிடையாது. எல்லோரும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். ஹேமா கமிட்டி அறிக்கை பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளியாகி இருக்கிறது. அதில் சுட்டிக்காட்டியுள்ள பிரச்சினைகளை சரி செய்ய வேண்டுமே தவிர அதை வைத்து பிரச்சினை செய்யக் கூடாது” எனப் பேசியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE