பாடகர் ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் கூட்ட நெரிசலால் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசைக்கச்சேரியை நடத்தினார். இதில் நிகழ்ச்சி சரியாக ஏற்பாடு செய்யாமல் இருந்ததால் காசு கொட்டிக் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலராலும் கச்சேரிக்குப் போக முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்ட அவலம் நடந்தது. மேலும், இதில் பலர் படுகாயமும் உடல், மனச்சோர்வும் அடைந்தனர். இது குறித்துப் பலரும் இணையவெளியில் அதிருப்தி தெரிவிக்க இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஹ்மானும் இதுதொடர்பாக மன்னிப்புக் கோரினார்.
பின்பு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது இலங்கையில் பாடகர் ஹரிஹரனின் இசைக் கச்சேரி நேற்று நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த இசை நிகழ்ச்சியில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்பா, யோகி பாபு உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வதாகவும் தகவல் வெளியானது. இதனால், அங்கு அளவுக்கதிகமாக கூட்டம் கூடியிருக்கிறது. மேலும், சென்னையில் நடந்தது போலவே யாழ்ப்பாணத்திலும் அளவுக்கு அதிகமாக டிக்கெட் வழங்கப்பட்டிருந்ததால், டிக்கெட்டுக்கான போதிய இடம் அங்கு இல்லை. இதனால் அங்கு பெரும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!
அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!
கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!
தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!