நடிகர் அஜித் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்துள்ளார். அவரின் சமீபத்திய புகைப்படங்கள்தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துப் பிரபலமாகும் குழந்தைகள் அடுத்த சில வருடங்களிலேயே கதாநாயகியாக கலக்குகிறார்கள். நடிகைகள் மீனா, சாரா, அனோஷ்கா என இந்த பட்டியல் ரொம்பவே பெரிது. அப்படி அஜித்தின் ‘வீரம்’ படத்தில் நடித்துப் பிரபலமானவர் யுவினா பார்தவி.
இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘இவன் வேற மாதிரி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த நிலையில், அவர் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு வளர்ந்துள்ளார்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு ‘சர்க்கார்’ படத்தில் நடித்தார். இதற்கடுத்து அவர் இப்போது ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் விழா சமீபத்தில் நடந்துள்ளது. இந்த விழாவிற்கு யுவினா பார்தவி வந்துள்ளார். இதில்தான் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!
அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!
ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!
பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!
மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!