இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிக்காகத் தனிக் கொடியை திருச்சியில் ரஜினி ரசிகர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படம் இன்று வெளியானதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கட் அவுட், மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து நடனம் என திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இதேபோன்ற கொண்டாட்டத்தையும் திருச்சியிலும் ரஜினி ரசிகர்கள் செய்திருக்கிறார்கள். இதோடு இவர்கள் செய்திருக்கும் மற்றொரு செயலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய கொடி ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். ’லால் சலாம்’ என்ற படத்தின் தலைப்பிற்கு ஏற்ப சிவப்பு நிறக் கொடியில் மஞ்சள் நிற வட்டத்திற்குள் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை அச்சிட்டு அதைச் சுற்றி ‘சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்’ எனும் வாக்கியத்தை அச்சிட்டுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!
சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!
சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!
பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!
என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!