ஆந்திராவில் இன்று நடிகர் பவன் கல்யாணின் படம் ரீரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் தியேட்டருக்குள் தீ வைத்து கொளுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் ஹிட்டான பழைய கிளாஸிக் படங்களை மீண்டும் திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யும் கலாச்சாராம் தற்போது அதிகமாகி வருகிறது. இதற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்புக் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் தமிழில் ‘வாரணம் ஆயிரம்’, ‘மயக்கம் என்ன’ போன்ற படங்களும் ரீ- ரிலீஸாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில் ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணின் ’கேமராமேன் கங்காதோ ராம்பாபு’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்காக ரசிகர்கள் தியேட்டருக்குள்ளும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடல்கள் பாடியும், காகிதங்களை கிழித்து எறிந்தும் அவர்கள் நடனம் ஆடினர். அப்போது உற்சாக மிகுதியில் கிழித்துப் போட்ட பேப்பர் குப்பைகளை ஒன்றாக சேர்த்து திரையங்கிற்குள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர் ரசிகர்கள். ஆபத்து அறியாமல் இவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திடீரென தியேட்டருக்குள் பற்றியத் தீயால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்பு அங்கு திரண்டிருந்த ரசிகர்களை திரையரங்கு ஊழியர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!
சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!
சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!
பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!
என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!