என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

By காமதேனு

'லால் சலாம்’ படம் இன்று வெளியாவதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து பகிர்ந்துள்ள ட்வீட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லால் சலாம் படத்தில் ரஜினி, விஷ்ணு விஷால்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இன்று ‘லால் சலாம்’ படம் வெளியாகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிடப் பலர் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் கதையால் ஈர்க்கப்பட்ட ரஜினி, தானே மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யாவிடம் கேட்டதாக இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் படம் இன்று வெளியாவதை முன்னிட்டு, மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய ’லால் சலாம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ எனக் கூறியுள்ளார். ஐஸ்வர்யா அவரை கவனித்துக் கொள்ளும்படியான அன்பானப் புகைப்படத்தையும் பகிர்ந்து இந்த விஷயத்தைக் கூறியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE