அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை திவ்ய பாரதி!

By KU BUREAU

நடிகை திவ்யபாரதி அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் ஜிவி பிரகாஷின் ‘பேச்சுலர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் திவ்ய பாரதி. டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பை மையமாகக் கொண்டு வெளியான இந்தப் படத்தில் கதாநாயகனுடன் பல நெருக்கமான காட்சிகளில் தைரியமாக நடித்திருந்தார். இதில் ஜிவி பிரகாஷ்- திவ்யபாரதி ஜோடியும் ரசிக்கப்பட்டது. பின்பு, தெலுங்கில் ‘கோட்’, தமிழில் ‘மகாராஜா’ ஆகிய படங்களில் நடித்தார். இப்போது மீண்டும் ஜிவி பிரகாஷூடன் ‘கிங்ஸ்டன்’ என்ற படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, கிளாமரான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை கவனம் ஈர்த்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட திவ்யபாரதி அரபிக்குத்து பாடலுக்கு மாணவிகளுடன் சேர்ந்து மேடையில் நடனமாடி அவர்களை மகிழ்வித்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE